18
அரசனுக்கும் அரசனின் அன்னைக்கும் சொல்லுங்கள்: கீழே அமருங்கள். ஏனெனில் உங்கள் மேன்மையின் மணிமுடி உங்கள் தலைகளிலிருந்து வீழ்ந்துவிட்டது.
19
நெகேபைச் சார்ந்த நகர்கள் எல்லாம் அடைபட்டுவிட்டன: அவற்றைத் திறப்பார் யாருமில்லை: யூதா முழுவதும் நாடுகடத்தப்பட்டுள்ளது. அது முற்றிலுமாய் நாடு கடத்தப்பட்டுள்ளது.
20
உன் கண்களை உயர்த்தி வடக்கிலிருந்து வருபவர்களைப் பார்: உனக்குத் தரப்பட்ட மந்தை-உன் பெருமைக்குரிய மந்தை-எங்கே?
21
உன் நண்பர்களாக நீ வளர்த்து விட்டவர்களே உன் தலைவர்களாக ஏற்படுத்தப்படும்போது நீ என்ன சொல்வாய்? பேறுகாலப் பெண்ணின் வேதனை உன்னைப் பற்றிக் கொள்ளாமல் போகுமா?
22
இவையெல்லாம் எனக்கு ஏன் நிகழ வேண்டும் என நீ உன் உள்ளத்தில் சிந்திக்கலாம்: உன் குற்றம் பெரிது! அதனால்தான் உன் ஆடை அகற்றப்பட்டுள்ளது! உன் கால்கள் புண்படுத்தப்பட்டன.