எரேமியா 12:7-11 - WCV
7
நான் என் வீட்டைப் புறக்கணித்தேன்: என் உரிமைச் சொத்தைத் தள்ளிவிட்டேன்: என் உள்ளத்துக்கு இனியவளை அவளின் எதிரிகளிடம் ஒப்புவித்துவிட்டேன்.
8
என் உரிமைச்சொத்து எனக்கு ஒரு காட்டுச் சிங்கம்போல் ஆயிற்று: அது எனக்கு எதிராய்க் கர்ச்சிக்கின்றது: எனவே நான் அதனை வெறுக்கின்றேன்.
9
என் உரிமைச்சொத்து எனக்குப் பல வண்ணப் பறவைபோல் ஆயிற்று: சுற்றிலுமுள்ள பறவைகள் எல்லாம் அதற்கு எதிராய் எழுந்துள்ளன: வயல்வெளி விலங்குகளே, வாருங்கள்: வந்து கூடுங்கள்: அதனை விழுங்குங்கள்.
10
மேய்ப்பர்கள் பலர் என் திராட்சைத் தோட்டத்தை அழித்தார்கள்: எனது பங்கை மிதித்துப் போட்டார்கள்: எனது இனிய பங்கைப் பாழடைந்த பாலைநிலம் ஆக்கினார்கள்.
11
அவர்கள் அதைப் பாழாக்கினார்கள்: அது என்னை நோக்கிப் புலம்புகிறது: நாடு முழுவதும் பாழாகிவிட்டது: ஆனால் யாரும் அதுபற்றிக் கவலைப்படுவதில்லை.