செருக்கினாலும் இதயத்தில் எழும் இறுமாப்பினாலும் அவர்கள் சொல்லுவதாவது: “செங்கல் கட்டடம் இடிந்து வீழ்ந்தது: எனினும், செதுக்கிய கற்களால் நாங்கள் கட்டியெழுப்புவோம். காட்டத்தி மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன: எனினும், அவற்றிற்குப் பதிலாகக் கேதுரு மரங்களை வைப்போம்”.