ஏசாயா 8:7-10 - WCV
7
ஆதலால் ஆண்டவர் ஆற்றலுடன் பெருக்கெடுத்தோடும் பேராற்றைப் போன்ற அசீரிய அரசனையும் அவன் மேன்மையான படைகள் அனைத்தையும் அவர்களுக்கு எதிராக அணிதிரண்டு வரச் செய்தார்: கால்வாய்கள் அனைத்தையும் அதன் வெள்ளம் நிரப்பும்: எல்லாக் கரைகள் மேலும் அது புரண்டு பாயும்:
8
எங்கும் வெள்ளக்காடாய், காட்டாறாய் ஓடும்: யூதா நாட்டுக்குள் புகுந்து அதன் கழுத்தை எட்டும்: இம்மானுவேலே, அதன் கிளைகள் உன் நாட்டின் பரப்பையெல்லாம் நிரப்பி நிற்கும்:
9
மக்களினங்களே, ஒருங்கிணையுங்கள்: ஆயினும் நொறுக்கப்படுவீர்கள்: தொலைநாட்டிலுள்ள அனைத்து மக்களே, செவிகொடுங்கள்: போருக்கென இடையைக் கட்டிக் கொள்ளுங்கள்: ஆயினும் கலக்கமுறுவீர்கள். போர்க்கோலம் கொள்ளுங்கள்: ஆயினும் முறியடிக்கப்படுவீர்கள்.
10
ஒன்று கூடிச் சதித்திட்டம் தீட்டுங்கள்: அதுவும் விழலுக்கு இறைத்த நீராகும்: கூடிப்பேசி முடிவெடுங்கள்: அதுவும் பயனற்றுப் போகும். ஏனெனில் கடவுள் எங்களோடு இருக்கிறார்.