9
ஆண்டவரே, கடுஞ்சினம் கொள்ளாதிரும்: குற்றத்தை என்றென்றும் நினையாதிரும்: உம் மக்களாகிய எங்கள் அனைவரையும் கண்ணோக்கும்.
10
உம் புனித நகர்கள் பாலை நிலமாயின: சீயோன் பாழ் நிலமாயிற்று: எருசலேம் பாழடைந்து கிடக்கின்றது.
11
எம் மூதாதையர் உம்மைப் போற்றிப் பாடிய தூய்மையும் மாட்சியும் மிக்க எங்கள் திருக்கோவில் நெருப்புக்கு இரையாயிற்று: எங்களுக்கு அருமையானவை அனைத்தும் அழிந்து போயின.
12
ஆண்டவரே, இவற்றைக் கண்டும் நீர் வாளாவிருப்பீரோ? மவுனமாயிருந்து எங்களைக் கடுமையாய் வருத்துவீரோ?