3
ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்: உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய்.
4
“கைவிடப்பட்டவள்” என்று இனி நீ பெயர்பெற மாட்டாய்: “பாழ்பட்டது” என இனி உன் நாடு அழைக்கப்படாது: நீ “எப்சிபா” என்று அழைக்கப்படுவாய்: உன் நாடு “பெயுலா” என்று பெயர் பெறும். ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்: உன் நாடு மணவாழ்வு பெறும்.
5
இளைஞன் கன்னிப் பெண்ணை மணப்பதுபோல உன்னை எழுப்பியவர் உன்னை மணந்து கொள்வார்: மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.