10
அன்னிய நாட்டவர் உன் மதிற் சுவரைக் கட்டியெழுப்புவர்: அவர்களின் மன்னர் உனக்குப் பணிவிடை செய்வர்: ஏனெனில், சினமுற்று நான் உன்னை நொறுக்கினேன்: நான் கனிவுற்று உனக்கு இரக்கம் காட்டியுள்ளேன்.
11
உன் வாயில்கள் எப்போதும் திறந்திருக்கும்: இராப் பகலாய் அவை பூட்டப்படாதிருக்கும்: பிற இனத்தாரின் செல்வம் உன்னிடம் கொண்டு வரப்படவும், அவர்களின் மன்னர் ஊர்வலமாய் அழைத்து வரப்படவும், அவை திறந்திருக்கும்.
12
உனக்குப் பணிபுரியாத வேற்று நாடோ அரசோ அழிந்துவிடும்: அவை முற்றிலும் பாழடைந்து போகும்.
13
லெபனோனின் மேன்மை உன்னை வந்து சேரும்: என் திருத்தூயகத்தைச் சுற்றியுள்ள இடத்தை அழகுபடுத்தத் தேவதாரு, புன்னை, ஊசியிலை மரம் ஆகியவை கொண்டு வரப்படும்: என் பாதங்களைத் தாங்கும் தலத்தை மேன்மைப்படுத்துவேன்.
14
உன்னை ஒடுக்கியவரின் புதல்வர் உன்னிடம் தலைவணங்கி வருவர்: உன்னை அவமதித்தவர் அனைவரும் உன் காலடியில் பணிந்து வீழ்வர்: “ஆண்டவரின் நகர்” என்றும், “இஸ்ரயேலின் தூயவரது சியோன்” என்றும் உன்னை அவர்கள் அழைப்பர்.