ஏசாயா 6:11-13 - WCV
11
அதற்கு நான், என் தலைவரே! எத்துணை காலத்திற்கு இது இவ்வாறிருக்கும்?” என்று வினவினேன். அதற்கு அவர், “நகரங்கள் அழிந்து குடியிருப்பார் இல்லாதனவாகும்: வீடுகளில் வாழ்வதற்கு மனிதர் இரார்: நாடு முற்றிலும் பாழ்நிலமாகும்:
12
ஆண்டவர் மனிதர்களைத் தொலை நாட்டிற்குத் துரத்தி விடுவார்: நாட்டில் குடியிருப்பாரின்றி வெற்றிடங்கள் பல தோன்றும்: அதுவரைக்குமே இவ்வாறிருக்கும்.
13
பத்தில் ஒரு பங்கு மட்டும் நாட்டில் எஞ்சியிருந்தாலும் அதுவும் அழிக்கப்படும்: தேவதாரு அல்லது கருவாலி மரம் வெட்டி வீழ்த்தப்பட்டபின் அடிமரம் எஞ்சியிருப்பதுபோல் அது இருக்கும். அந்த அடிமரம்தான் தூய வித்தாகும்,” என்றார்.