6
பள்ளத்தாக்கின் வழவழப்பான கற்களினின்று உருவான சிலைகளே உன் பங்கு: ஆம், அவையே உன் பங்கு: அவற்றிற்கு நீ நீர்மப்பலியை ஊற்றியுள்ளாய்: உணவுப் படையலைப் படைத்துள்ளாய்: இவற்றால் நான் அமைதி அடைவேனோ?
7
வானாளவ உயர்ந்து நிற்கும் மலைமேல் உன் மஞ்சத்தை வைத்துள்ளாய்: பலிசெலுத்துமாறு அங்கு ஏறிப்போனாய்.
8
கதவுக்கும் கதவின் நிலைக்கும் பின்னால் உன் நினைவுக்குறியை வைத்தாய்: என்னை விட்டுவிட்டு உன் மஞ்சத்தைத் திறந்தாய்: ஏறிச்சென்று அதை விரிவாக்கினாய்: நீ எவருடைய படுக்கையை விரும்பினாயோ, அவர்களோடு ஓர் உடன்பாடு செய்து கொண்டாய்: அவர்களின் திறந்த மேனியைக் கண்டாய்.
9
நீ எண்ணெயுடன் மோலேக்கிடம் சென்றாய்: நறுமணப் பொருட்களைப் பெருக்கிக் கொண்டாய்: தொலை நாடுகளுக்கு உன் தூதர்களை அனுப்பினாய்: பாதாளம் மட்டும் அனுப்பினாய்.
10
உன் வழிப்பயணம் தொலைவானதால் களைத்துப் போனாய்: ஆயினும், “இது வீண்” என்று நீ சொல்லவில்லை: உன் கையில் புதியதோர் ஆற்றல் பெற்றாய்: ஆதலால் நீ சோர்ந்து போகவில்லை.