11
அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.
12
மகிழ்ச்சியுடன் நீங்கள் புறப்பட்டுச் செல்வீர்கள்: அமைதியுடன் நடத்திச் செல்லப் படுவீர்கள்: மலைகளும் குன்றுகளும் உங்கள் முன் முழங்கி மகிழ்ந்து பாடும்: காட்டு மரங்கள் கைகொட்டி ஆர்ப்பரிக்கும்.
13
முட்செடிக்குப் பதிலாக தேவதாரு மரம் முளைத்து வளரும்: காஞ்சொறிக்குப் பதிலாக நறுமணச் செடி துளிர்த்து வளரும்: இது, ஆண்டவருக்கு நற்பெயர் ஏற்படச் செய்யும்: அழிவில்லா, என்றுமுள நினைவுச் சின்னமாய் அமையும்.