ஏசாயா 52:4-6 - WCV
4
ஆண்டவராகிய என் தலைவர் கூறுவது இதுவே: முன்னாளில் என் மக்கள் தங்கி வாழ்வதற்கு எகிப்திற்குச் சென்றார்கள்: அசீரியன் காரணம் எதுவுமின்றி அவர்களை ஒடுக்கினான்.
5
இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது? என்கிறார் ஆண்டவர். ஈட்டுத்தொகை செலுத்தாது என் மக்கள் இழுத்துச் செல்லப்பட்டார்கள்: அவர்களை ஆளுவோர் நற்பெருமை பேசுகின்றனர்: எந்நாளும் இடைவிடாது என் பெயர் இகழப்படுகின்றது, என்கிறார் ஆண்டவர்.
6
ஆதலால் என் மக்கள் எனது பெயரை அறிந்து கொள்வார்கள். இதைச் சொல்லுகிறவர் நானே என்பதை அந்நாளில் உணர்ந்து கொள்வார்கள்: இதோ, நான் இங்கே இருக்கின்றேன்.