ஏசாயா 5:26-29 - WCV
26
அவர் தொலையிலுள்ள பிற இனத்துக்கு ஓர் அடையாளக் கொடியைக் காட்டியுள்ளார்: மண்ணுலகின் எல்லைகளிலிருந்து சீழ்க்கை ஒலியால் அதனை அழைத்துள்ளார், அந்த இனம் வெகுவிரைவாய் வந்து கொண்டிருக்கின்றது.
27
அவர்களுள் ஒருவனும் களைப்பபடையவில்லை: இடறி விழவில்லை: தூங்கவில்லை: உறங்கவுமில்லை: அவர்களில் யாருக்கேனும் இடுப்புக்கச்சை அவிழ்ந்து விழவில்லை: மிதியடிகளின் வாரேதும் அறுந்து போகவுமில்லை.
28
அவர்களுடைய அம்புகள் கூர்மையானவை: அவர்களுடைய விற்கள் நாணேற்றப்பட்டுள்ளன: அவர்களுடைய குதிரைகளின் குளம்புகள் கருங்கற்களைப்N பால் காட்சியளிக்கின்றன: அவர்களுடைய தேர்ச் சக்கரங்கள் சூறாவளிக் காற்றைப்போல் சுழல்கின்றன.
29
அவர்களின் கர்ச்சனை பெண் சிங்கத்தினுடையதை ஒத்தது: இளஞ் சிங்கங்களைப்போல் அவர்கள் கர்ச்சிக்கிறார்கள்: உறுமிக்கொண்டு தங்கள் இரையைக் கவ்விப் பிடிப்பார்கள்: யாரும் விடுவிக்க இயலாதவாறு இரையை எடுத்துக்கொண்டு போய் விடுவார்கள்.