ஏசாயா 48:8-11 - WCV
8
உண்மையிலே நீ கேள்விப்படவுமில்லை: அறியவும் இல்லை: முன்பிருந்தே உன் செவிகள் திறந்திருக்கவில்லை: ஏனெனில் நீ “ஏமாற்றுப் பேர்வழி, கருப்பையிலிருந்தே கலகக்காரன்” என்று பெயர்பெற்றவன்: இதை நான் உறுதியாய் அறிவேன்.
9
என் பெயரின் பொருட்டு என் சினத்தை அடக்கிக்கொள்கின்றேன்: என் புகழை முன்னிட்டு உன்னை வெட்டி வீழ்த்தாமல், உனக்காக அதைக் கட்டுப்படுத்துகின்றேன்.
10
நான் உன்னைப் புடமிட்டேன்: ஆனால் வெள்ளியைப் போலல்ல: துன்பம் எனும் உலை வழியாய் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.
11
என்பொருட்டே, என்னை முன்னிட்டே அதைச் செய்கின்றேன்: என் பெயரை எங்ஙனம் களங்கப்படுத்தலாம்? என் மாட்சியை நான் எவருக்கும் விட்டுக்கொடேன்.