ஏசாயா 47:12-14 - WCV
12
இளமை முதல் நீ முயன்று பயின்ற உன் மந்திரங்களோடும் பில்லி சூனியங்களோடும் வந்து நில்: ஒருவேளை உன்னால் சிறிது வெற்றி பெற முடியும்: ஒருவேளை உன் எதிரியை அச்சுறுத்த முடியும்.
13
திட்டங்கள் தீட்டியே நீ சோர்வுற்றாய்: வான்வெளியைக் கணிப்போரும், விண்மீன்களை ஆய்வோரும் நிகழவிருப்பதை அமாவாசைகளில் உனக்கு முன்னுரைப்போரும், வந்துநின்று உன்னை விடுவிக்கட்டும்.
14
இதோ, அவர்கள் பதர் போன்றவர்கள், நெருப்பு அவர்களைப் பொசுக்கி விடும்: தீப்பிழம்பினின்று தம் உயிரைக் காத்துக்கொள்ள மாட்டார்கள்: அது குளிர்காயப் பயன்படும் தணல் அன்று: எதிரே உட்காரத் தக்க கனலும் அன்று.