ஏசாயா 45:21-25 - WCV
21
அறிவியுங்கள்: உங்கள் வழக்கை எடுத்துரையுங்கள்: ஒன்றாகச் சிந்தித்து முடிவெடுங்கள்: தொடக்கத்திலிருந்து இதை வெளிப்படுத்தியவர் யார்? முதன் முதலில் இதை அறிவித்தவர் யார்? ஆண்டவராகிய நான் அல்லவா? என்னையன்றிக் கடவுள் வேறு எவரும் இல்லை: நீதியுள்ளவரும் மீட்பு அளிப்பவருமான இறைவன் என்னையன்றி வேறு எவரும் இல்லை.
22
மண்ணுலகின் அனைத்து எல்லை நாட்டோரே! என்னிடம் திரும்பி வாருங்கள்: விடுதலை பெறுங்கள்: ஏனெனில் நானே இறைவன்: என்னையன்றி வேறு எவருமில்லை.
23
நான் என்மேல் ஆணையிட்டுள்ளேன்: என் வாயினின்று நீதிநிறை வாக்கு புறப்பட்டுச் சென்றது: அது வீணாகத் திரும்பி வராது: முழங்கால் அனைத்தும் எனக்குமுன் மண்டியிடும்: நா அனைத்தும் என்மேல் ஆணையிடும்.
24
24”ஆண்டவரில் மட்டும் எனக்கு நீதியும் ஆற்றலும் உண்டு” என்று ஒவ்வொருவனும் சொல்லி அவரிடம் வருவான்: அவருக்கு எதிராகச் சீறி எழுந்தவர் அனைவரும் வெட்கக்கேடு அடைவர்.
25
இஸ்ரயேலின் வழி மரபினர் அனைவரும் ஆண்டவரால் ஏற்புடையோராகப் பெற்று அவரைப் போற்றுவர்.