ஏசாயா 43:24-26 - WCV
24
பணம் கொடுத்து நீ எனக்கென்று நறுமணப்படையல் வாங்கவில்லை: உன் பலிகளின் கொழுப்பால் என்னை நிறைவு செய்யவில்லை: மாறாக, உன் பாவங்களால் என்னைத் தொல்லைப்படுத்தினாய்: உன் தீச்செயல்களால் என்னைச் சலிப்புறச் செய்தாய்.
25
நான், ஆம், நானே, உன் குற்றங்களை என்பொருட்டுத் துடைத்தழிக்கின்றேன்: உன் பாவங்களை நினைவிற் கொள்ள மாட்டேன்.
26
கடந்ததை எனக்குச் சொல்லிக் காட்டுங்கள். ஒருமிக்க நாம் வழக்காடுவோம்: நீங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிலைநாட்டுவதற்கானவற்றை எடுத்துரையுங்கள்.