ஏசாயா 42:22-25 - WCV
22
ஆனால் இந்த மக்களினம் கொள்ளையடிக்கப்பட்டுச் சூறையாடப்பட்டது: அவர்கள் அனைவரும் குழிகளில் சிக்கினர்: சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டனர்: விடுவிப்பார் எவருமிலர்: கவர்ந்து செல்லப்பட்டனர்: கொள்ளைப் பொருளாயினர்: “திருப்பி அனுப்பு” என்று சொல்வாரில்லை.
23
உங்களுள் எவன் இதற்குச் செவி கொடுப்பான்? எவன் வருங்காலத்திற்காகக் கவனித்துக் கேட்பான்?
24
யாக்கோபைக் கொள்ளைக்காரரிடமும் இஸ்ரயேலலைக் கள்வரிடமும் ஒப்புவித்தவர் யார்? ஆண்டவரன்றோ? அவருக்கு எதிராக அன்றோ நாம் பாவம் செய்தோம்! மக்கள் அவருடைய நெறிகளைப் பின்பற்ற விரும்பவில்லை: அவரது திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படியவில்லை.
25
ஆகவே அவர் அவர்கள்மேல் தம் கோபக்கனலைக் கொட்டினார்: கடும் போர் மூண்டது: அவரது சினம் அவர்களைச் சூழ்ந்து பற்றி எரிந்தது: ஆயினும் அவர்கள் உணரவில்லை: அவர்களை நெருப்பு சுட்டெரித்தது: ஆயினும் அவர்கள் சிந்தையில் கொள்ளவில்லை.