ஏசாயா 41:22-26 - WCV
22
அத்தெய்வங்கள் அருகில் வந்து, நிகழப்போவதை நமக்கு அறிவிக்கட்டும்: முன்னே நடந்தவற்றை எடுத்துரைக்கட்டும்: நாம் சிந்தித்து அவற்றின் இறுதி விளைவை அறிந்து கொள்வோம்: இல்லாவிடில் வரவிருப்பவற்றை நமக்கு எடுத்துக்கூறட்டும்.
23
23”நீங்கள் தெய்வங்கள் என நாங்கள் உணரும்பொருட்டு வருங்காலத்தில் நடப்பனவற்றை எங்களுக்குக் கூறுங்கள்: நன்மையாவது தீமையாவது செய்யுங்கள்: நாங்கள் யாவரும் ஒன்றாகக்கண்டு திகைத்து நிற்போம்.
24
இதோ, நீங்கள் ஒன்றுமில்லாமை! உங்கள் செயலும் ஒன்றுமில்லாமையே! உங்களைத் தேர்ந்துகொள்பவன் வெறுக்கத்தக்கவன்”.
25
நான் வடக்கிலிருந்து ஒருவனை எழும்பச் செய்தேன்: அவன் கதிரவன் உதிக்கும் திசையிலிருந்து வந்துவிட்டான்: அவன் என் பெயரைப் போற்றுவான்: ஒருவன் சேற்றைக் குழைப்பதுபோலும் குயவன் களிமண்ணை மிதிப்பது போலும் அவன் ஆளுநர்களை நடத்துவான்.
26
நாங்கள் அறியும்படி தொடக்கத்திலிருந்தே இதை அறிவித்தவர் யார்? 'அது சரி' என்று நாங்கள் சொல்லும்முன்னரே உரைத்தவர் யார்? அப்படி எதுவும் அறிவிக்கவில்லை: முன்னுரைக்கவில்லை: நீங்கள் பேசியதை யாரும் கேட்டதுமில்லை.