ஏசாயா 41:10-15 - WCV
10
அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்: கலங்காதே, நான் உன் கடவுள், நான் உனக்கு வலிமை அளிப்பேன்: உதவி செய்வேன்: என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன்.
11
உனக்கெதிராய் வெகுண்டெழுவோர் அனைவரும் மானக்கேடுற்று இழிநிலை அடைவர்: உன்னை எதிர்த்து வழக்காடுவோர் இல்லாதொழிவர்.
12
உன்னை எதிர்த்துப் போராடியோரை நீ தேடுவாய்: ஆனால் அவர்களைக் கண்டுபிடிக்க மாட்டாய்: உன்னை எதிர்த்துப் போரிட்டோர் ஒழிந்து போவர்.
13
ஏனெனில் நானே உன் கடவுளாகிய ஆண்டவர்: உன் வலக்கையைப் பற்றிப் பிடித்து, “அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன்” என்று உன்னிடம் சொல்பவரும் நானே.
14
“யாக்கோபு என்னும் புழுவே, இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே, அஞ்சாதிரு: நான் உனக்குத் துணையாய் இருப்பேன்,” என்கிறார் ஆண்டவர்.
15
இதோ, நான் உன்னைப் புதிய கூர்மையான போரடிக்கும் கருவியாக்குவேன். நீ மலைகளைப் போரடித்து நொறுக்குவாய்: குன்றுகளைத் தவிடுபொடியாக்குவாய்.