ஏசாயா 40:9-12 - WCV
9
சீயோனே! நற்செசய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவரே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! 'இதோ உன் கடவுள்' என்று யூதா நகர்களிடம் முழங்கு!
10
இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்: அவர் ஆற்றலோடு ஆட்சி புரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்: அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன.
11
ஆயனைப்போல் தம்மந்தையை அவர் மேய்ப்பார்: ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்: அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்: சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.”
12
கடல்நீரைத் தம் உள்ளங்கை அளவால் கணக்கிட்டவர் யார்? வானத்தைச் சாண் அளவால் கணித்திட்டவர் யார்? மண்ணுலகின் புழுதியை மரக்காலால் அளந்தவர் யார்? மலைகளை நிறைகோலாலும் குன்றுகளைத் தராசாலும் நிறுத்தவர் யார்?