29
எனக்கெதிராய் நீ கொந்தளித்ததும் செருக்குடன் நீ பேசியதும் என் செவிகளுக்கு எட்டியது: எனவே உன் மூக்கில் என் வளையத்தையும் உன் வாயில் என் கடிவாளத்தையும் மாட்டுவேன்: நீ வந்த வழியே உன்னைத் திருப்பி விடுவேன்.
30
இதுவே உனக்கு அடையாளம்: தானாய் விழுந்து முளைப்பதை இந்த ஆண்டும், அதிலிருந்து வளர்வதை இரண்டாம் ஆண்டும் உண்பாய். மூன்றாம் ஆண்டோ விதைத்து அறுவடை செய்வாய்: திராட்சைச் செடி நட்டு அதன் கனிகளை உண்பாய்.
31
யூதா வீட்டாருள் தப்பிப்பிழைத்த எஞ்சியோர் ஆழ வேர்விட்டு மேலே கனி தருவர்.
32
ஏனெனில் எஞ்சியோர் எருசலேமிலிருந்தும் தப்பிப்தோர் சீயோன் மலையினின்றும் புறப்பட்டு வருவர்: படைகளின் ஆண்டவரது பேரார்வமே இதைச் செய்து முடிக்கும்.
33
ஆதலால் அசீரிய மன்னனை முன்னிட்டு ஆண்டவர் கூறுவது இதுவே: அவன் இந்த நகருக்குள் நுழையமாட்டான்: ஓர் அம்பும் எய்ய மாட்டான்: அவன் கேடயம் தாங்கி நகர்முன் வரத் துணியமாட்டான்: அதை முற்றுகையிடவும் மாட்டான்.
34
வந்த வழியே அவன் திரும்பிச் செல்வான்: இந்நகருக்குள் அவன் நுழையவே மாட்டான்,” என்கிறார் ஆண்டவர்.
35
என் பொருட்டும் என் ஊழியன் தாவீது பொருட்டும் இந்நகரைக்”காத்தருள்வேன், விடுவிப்பேன்.
36
ஆண்டவரின் தூதர் புறப்பட்டுச்சென்று அசீரியரின் பாசறையிலிருந்து ஓர் இலட்சத்து எண்பத்தையாயிரம் பேசைச் சாகடித்தார். மறுநாள் காலையில் ஏனையோர் விழித்தெழுந்தனர். இதோ, எங்கும் பிணங்களைக் கண்டனர்.
37
உடனே அசீரிய மன்னன் சனகெரிபு அங்கிருந்து திரும்பி நினிவே சென்று தங்கியிருந்தான்.
38
ஒருநாள் அவன் நிஸ்ரோக்கு என்னும் தன் தெய்வத்தின் கோவிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது அதிரமெலக்கு, சரேட்சர் என்ற அவன் புதல்வர்கள் வாள்முனையில் அவனைக் கொன்றுவிட்டு அரராத்து நாட்டிற்குத் தப்பியோடினர். அவனுக்குப்பின் ஏசர்கத்தோன் என்ற அவன் மகன் ஆட்சி செய்தான்.