ஏசாயா 31:1-5 - WCV
1
துணை வேண்டி எகிப்துக்குச் செல்வோருக்கு ஐயோ கேடு! அவர்கள் குதிரைகளுக்காகக் காத்துக் கிடக்கின்றர்: பெரும் தேர்ப்படைகளையும் வலிமைமிகு குதிரை வீரர்களையும் நம்பியிருக்கிறார்கள்: இஸ்ரயேலின் தூயவருக்காக ஆவலுடன் காத்திருக்கவில்லை: ஆண்டவரைத் தேடுவதுமில்லை:
2
ஆனால் அவரோ ஞானமுடையவர்: தீங்கை வருவிப்பவர்: தம் வார்த்தைகளின் இலக்கை மாற்றாதவர்: தீயோர் வீட்டார்க்கும் கொடியவருக்கு உதவுவோருக்கும் எதிராகக் கிளர்ந்தெழுபவர்.
3
எகிப்தியர் வெறும் மனிதரே, இறைவன் அல்ல: அவர்கள் குதிரைகள் வெறும் தசைப்பிண்டங்களே, ஆவிகள் அல்ல: ஆண்டவர் தம் கையை ஓங்கும் போது உதவி செய்பவன் இடறுவான்: உதவி பெறுபவன் வீழ்வான்: அவர்கள் அனைவரும் ஒருங்கே அழிந்தொழிவர்.
4
ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: சிங்கமோ இளஞ்சிங்கமோ தன் இரைமேல் பாய்ந்து கர்ச்சிக்கும் போது மேய்ப்பர் கூட்டம் தனக்கெதிராய் எழுப்பும் கூக்குரலால் திகிலடைவதில்லை: அவர்கள் ஆரவாரத்தைப் பொருட்படுத்துவதில்லை. அதுபோல் படைகளின் ஆண்டவர் சீயோன் மலைமேலும் அதன் குன்றின்மேலும் போர்புரிய இறங்கி வருவார்.
5
பறக்கும் பறவைகள் போல் படைகளின் ஆண்டவர் எருசலேமுக்குப் பாதுகாப்பாய் இருப்பார்: அதைப் பாதுகாத்து விடுவிப்பார்: தண்டிக்காமல் தப்புவிப்பார்.