ஏசாயா 30:15-17 - WCV
15
என் தலைவரும் இஸ்ரயேலின் தூயவருமான ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் என்னிடம் திரும்பி வந்து அமைதியுற்றால் விடுதலை பெறுவீர்கள்: அமைதியிலும் நம்பிக்கையிலுமே நீங்கள் வலிமை பெறுவீர்கள்: நீங்களோ ஏற்க மறத்தீர்கள்.
16
16”முடியாது, நாங்கள் குதிரை ஏறி விரைந்தோடத்தான் செய்வோம்” என்கிறீர்கள்: ஆம், தப்பியோடத்தான் போகிறீர்கள்: “விரைந்தோடும் தேரில் ஏறிச்செல்வோம்” என்கிறீர்கள்: ஆம், உங்களைத் துரத்தி வருபவர் விரைந்து வருவார்.
17
ஒருவன் மிரட்ட, நீங்கள் ஆயிரம் பேர் ஓடுவீர்கள்: ஐவர் அச்சுறுத்த நீங்கள் உயிர் தப்பி ஓடுவீர்கள்: மலை உச்சிக் கொடிமரம் போல், குன்றின்மேல் சின்னம்போல் எஞ்சி நிற்பீர்கள்.