9
“இவன் யாருக்கு அறிவு புகட்டுவான்? யாருக்குச் செய்தியைப் புரியுமாறு எடுத்துரைப்பான்? பால்குடி மறந்தோர்க்கா? தாய்ப்பாலை விட்டு அகன்றோர்க்கா?
10
ஏனெனில் கட்டளை மேல் கட்டளை, கட்டளைமேல் கட்டளை: அளவு நூலுக்குமேல் அளவுநூல், அளவு நூலுக்கு மேல் அளவுநூல்: இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம்” என்கின்றனர்.
11
ஆனால் குழறிய பேச்சும் புரியாத மொழியும் கொண்டோர் மூலம் ஆண்டவர் இம்மக்களுக்குப் பாடம் கற்பிப்பார்.
12
12”இதோ உள்ளது இளைப்பாற்றி: களைத்தவன் இளைப்பாறட்டும்: இதோ உள்ளது இளைப்பாற்றி” என்று அவர்களுக்குச் சொன்னாலும் செவி கொடுக்க மாட்டார்கள்.