ஏசாயா 24:3-12 - WCV
3
நாடு முற்றிலும் பாழடைந்து போகும்: முழுவதும் சூறையாடப்படும். ஏனெனில், இது ஆண்டவர் கூறிய வார்த்தை.
4
நிலம் புலம்பி வாடுகின்றது. மண்ணுலகில் தளர்ந்து வாடுகின்றது, மண்ணுலக மக்களுள் உயர்ந்தோர் தளர்ச்சியுறுவர்.
5
நாடு அதில் குடியிருப்போரால் தீட்டுப்பட்டுள்ளது: ஏனெனில் அவர்கள் சட்டங்களை மீறினார்கள்: நியமங்களைச் சீர்குலைத்தார்கள்: என்றுமுள உடன்படிக்கையை முறித்தார்கள்.
6
ஆதலால், சாபம் நாட்டை விழுங்குகிறது. அதில் குடியிருப்போர் குற்றப்பழியில் சிக்கியுள்ளனர். அதில் வாழ்வோர் நெருப்பில் எரிந்து போகின்றனர்: சிலரே எஞ்சியிருப்பர்.
7
திராட்சை இரசம் அழுகின்றது: திராட்சைக் கொடி தளர்கின்றது: அக்களிக்கும் இதயங்களெல்லாம் பெருமூச்சு விடுகின்றன.
8
மேளத்தின் மகிழ்ச்சி ஒலி ஓய்ந்து விட்டது. அக்களித்திருந்தோரின் ஆரவாரம் அடங்கிவிட்டது: யாழின் இன்னிசை நின்றுவிட்டது.
9
பாடலுடன் அவர்கள் திராட்சை இரசம் குடிக்கமாட்டார்கள்: மதுவும் குடிப்போருக்குக் கசப்பாயிருக்கும்.
10
குழப்பத்தின் நகர் தகர்க்கப்பட்டது: யாரும் நுழையாதபடி வீடெல்லாம் பூட்டப்பட்டது.
11
திராட்சை இரசத்திற்காகத் தெருக்களில் கூச்சல் எழுகின்றது: மகிழ்ச்சி எல்லாம் மங்கி மறைகின்றது: விழாக்கள் நாட்டிலிருந்து அகற்றப்பட்டன.
12
பாழடைந்த நிலையே நகரில் எஞ்சியிருக்கின்றது: நுழைவாயில்கள் நொறுக்கப்பட்டும் பாழாய்க் கிடக்கின்றன.