ஏசாயா 24:19-23 - WCV
19
பூவுலகம் நொறுங்கிச் சிதறுகின்றது: நிலவுலகம் பிளந்து விரிகின்றது: மண்ணுலகம் அதிர்ந்து நடுங்குகின்றது.
20
குடிவெறியரைப் போல் மண்ணுலகம் தள்ளாடுகின்றது: குடிசைபோல் அது இடம் பெயர்ந்து செல்கின்றது: அதன் குற்றப்பழி பாரச்சுமையாய் அதை அழுத்துகின்றது: அது வீழ்ச்சியடையும்: இனி ஒருபோதும் எழாது.
21
அந்நாளில் ஆண்டவர் வானத்தில் வான் படைகளையும் நிலவுலகில் நிலவுலக மன்னர்களையும் தண்டிப்பார்.
22
கைதிகளாய் அவர்கள் படுகுழியில் ஒன்றுதிரட்டப்படுவார்கள்: சிறைக்கூடத்தில் அடைக்கப்படுவார்கள். நாள் பல சென்றபின் தண்டிக்கப்படுவார்ககள்.
23
நிலா நாணமுறுவாள்: கதிரவன் வெட்கமடைவான்: ஏனெனில், படைகளின் ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் அரசாள்வார். அவர்களின் பெரியோர் முன்னிலையில் அவர்தம் மாட்சி வெளிப்படும்.