ஏசாயா 24:1-6 - WCV
1
இதோ, ஆண்டவர் பூவுலகை வெறுமையாக்கிப் பாழடையச் செய்து, அதன் நிலப்பரப்பை உருக்குலையச் செய்து, அதில் வாழ்வோரைச் சிதறடிப்பார்.
2
அப்பொழுது மக்களுக்கு எப்படியோ அப்படியே குருக்களுக்கும், பணியாளனுக்கு எவ்வாறோ அவ்வாறே அவன் தலைவனுக்கும், பணிப்பெண்ணுக்கு எப்படியோ அப்படியே அவள் தலைவிக்கும், வாங்குபவனுக்கு எவ்வாறோ அவ்வாறே விற்பவனுக்கும், கடன் கொடுப்பவனுக்கு எப்படியோ அப்படியே கடன் வாங்குபவனுக்கும், வட்டிக்குக் கொடுத்தவனுக்கு எவ்வாறோ அவ்வாறே வட்டிக்கு வாங்கினவனுக்கும் நேரிடும்.
3
நாடு முற்றிலும் பாழடைந்து போகும்: முழுவதும் சூறையாடப்படும். ஏனெனில், இது ஆண்டவர் கூறிய வார்த்தை.
4
நிலம் புலம்பி வாடுகின்றது. மண்ணுலகில் தளர்ந்து வாடுகின்றது, மண்ணுலக மக்களுள் உயர்ந்தோர் தளர்ச்சியுறுவர்.
5
நாடு அதில் குடியிருப்போரால் தீட்டுப்பட்டுள்ளது: ஏனெனில் அவர்கள் சட்டங்களை மீறினார்கள்: நியமங்களைச் சீர்குலைத்தார்கள்: என்றுமுள உடன்படிக்கையை முறித்தார்கள்.
6
ஆதலால், சாபம் நாட்டை விழுங்குகிறது. அதில் குடியிருப்போர் குற்றப்பழியில் சிக்கியுள்ளனர். அதில் வாழ்வோர் நெருப்பில் எரிந்து போகின்றனர்: சிலரே எஞ்சியிருப்பர்.