1
காட்சிப் பள்ளத்தாக்கைக் குறித்த திருவாக்கு: வீட்டுக்கூரைகளின் மேல் நீங்கள் அனைவரும் ஏறியிருக்கிறீர்களே, உங்களுக்கு நிகழ்ந்தது என்ன?
2
ஆரவாரம் நிறைந்த நகரமே: அக்களித்து அமர்க்களப்படும் பட்டணமே! உங்களிடையே கொலை செய்யப்பட்டோர் வாளால் வெட்டி வீழ்த்தப்படவில்லை, போர்க்களத்திலும் செத்து மடியவில்லை.
3
உங்கள் தலைவர்கள் அனைவரும் ஒருங்கே ஓட்டமெடுத்தார்கள்: அம்பு எய்யாமலே அவர்கள் பிடிபட்டார்கள்: உன்னிடத்தில் இருந்தவர் யாவரும் வெகு தொலைவிற்குத் தப்பியோடியும் கண்டுபிடிக்கப்பட்டு ஒருசேரக் கைதானார்கள்.
4
ஆதலால் நான் “என்னை உற்று நோக்காதீர்கள், நான் மனம் கசந்து கதறியழ விடுங்கள்: என் மக்களாகிய மகளின் அழிவைக்குறித்து என்னை தேற்ற முயலாதீர்கள்” என்றேன்.