20
கல்லறையில் அவர்களோடு நீ இடம் பெறமாட்டாய்: ஏனெனில், உன் நாட்டை நீ அழித்து விட்டாய்: உன் மக்களைக் கொன்று போட்டாய்: தீங்கிழைப்போரின் வழிமரபு என்றுமே பெயரற்றுப் போகும்.
21
மூதாதையரின் தீச்செயல்களை முன்னிட்டு அவர்கள் புதல்வர்களுக்குக் கொலைக் களத்தைத் தயார்ப்படுத்துங்கள்: நாட்டை உரிமையாக்க இனி அவர்கள் தலையெடுக்கக்கூடாது: பூவுலகின் பரப்பை அவர்கள் நகரங்களால் நிரப்பக்கூடாது.”
22
“அவர்களுக்கு எதிராக நான் கிளர்ந்தெழுவேன்” என்கிறார் படைகளின் ஆண்டவர், “பாபிலோனின் பெயரையும் அங்கே எஞ்சியிருப்போரையும், வழி மரபினரையும் வழித்தோன்றல்களையும் இல்லாதொழிப்பேன்,” என்கிறார் ஆண்டவர்.