9
என் திருமுலை முழுவதிலும் தீமை செய்வார் எவருமில்லை: கேடு விளைப்பார் யாருமில்லை: ஏனெனில், கடல் தண்ணீரால் நிறைந்திருக்கிறது போல, மண்ணுலகம் ஆண்டவராம் என்னைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்.
10
அந்நாளில், மக்களினங்களுக்குச் சின்னமாய் விளங்கும் ஈசாயின் வேரைப் பிறஇனத்தார் தேடி வருவார்கள்: அவர் இளைப்பாறும் இடம் மாட்சி நிறைந்ததாக இருக்கும்.
11
அந்நாளில், என் தலைவர் மீண்டும் தம் கையை நீட்டி, அசீரியா, எகிப்து, பத்ரோசு, பாரசீகம், எத்தியோப்பியா, ஏலாம், சினார், ஆமாத்து முதலிய நாடுகளிலும், கடல் தீவுகளிலும் வாழும் தம் மக்களுள் எஞ்சியிருப்போரைத் தம் நாட்டிற்குத் திரும்பக் கொணர்வார்.
12
பிற இனத்தாருக்கென ஒரு கொடியை ஏற்றி வைப்பார்: இஸ்ரயேலில் நாடு கடத்தப்பட்டோரை ஒன்று திரட்டுவார்: யூதாவில் சிதறுண்டு போனவர்களை உலகின் நாற்புறத்திலிருந்தும் கூட்டிச் சேர்ப்பார்.