ஏசாயா 10:8-14 - WCV
8
அவன் இறுமாப்புடன் சொல்வதாவது: “என் படைத்தலைவர்கள் ஒவ்வொருவரும் ஓர் அரசர் அல்லவா?
9
கல்னேர் நகர் கர்கமிசு நகர் போன்ற தல்லவா? ஆமாத்து நகர் அர்ப்பாது நகருக்கு இணையல்லவா? சமாரியா நகர் தமஸ்கு நகரை ஒத்ததல்லவா?
10
சிறப்பு வாய்ந்த, சிலைவணங்கும் அரசுகள் வரை என் கை எட்டியிருக்கின்றது: அந்நாட்டுச் சிலைகள் எருசலேம், சமாரியா நகர்ச் சிலைகளைவிட எண்ணிக்கையில் மிகுதி.
11
சமாரியாவையும் அதிலுள்ள சிலைகளையும் அழித்துப் பாழ்படுத்தியவன் நான்: இப்படியிருக்க, எருசலேமுக்கும் அதன் மக்கள் வழிபடும் சிலைகளுக்கும் அவ்வாறே செய்யமாட்டேனோ?”
12
எனவே சீயோன் மலைமேலும் எருசலேமிலும் என் வேலைகள் அனைத்தையும் முடித்தபின், ஆணவம் நிறைந்த அசீர்pய அரசனின் சிந்தனையை முன்னிட்டும், இறுமாப்புடன் அவன் பேசிய பேச்சுகளை முன்னிட்டும் “அவனை நான் தண்டிப்பேன்” என்கிறார் என் தலைவர்.
13
ஏனெனில் அவன் இவ்வாறு சொன்னான்: “என் கைவலிமையாலே நான் அதைச் செய்து முடித்தேன்: என் ஞானத்தாலும் அறிவுக் கூர்மையாலும் அதற்குத் திட்டங்கள் தீட்டினேன்: மக்களினங்கள் தங்களிடையே வைத்துள்ள எல்லைகளை அகற்றினேன்: அவர்களுடைய கருவூலங்களைச் சூறையாடினேன்: அரியணையில் வீற்றிருந்தோரை ஒரு காளை மிதிப்பதுபோல் மிதித்துப்போட்டேன்.
14
குருவிக் கூட்டைக் கண்டுபிடிப்பது போல் என் கை மக்களினங்களின் செல்வங்களைக் கண்டு எடுத்துக்கொண்டது: புறக்கணித்த முட்டைகளை ஒருவன் பொறுக்கி எடுப்பதுபோல் நாடுகள் யாவற்றையுயம் ஒருங்கே சேர்த்துக்கொண்டேன். எனக்கெதிராக ஒருவரும் இறக்கை அடிக்கவில்லை. வாய் திறக்கவில்லை, கீச்சென்ற ஒலியெழுப்பவுமில்லை.”