ஏசாயா 10:16-18 - WCV
16
ஆதலால் தலைவராகிய படைகளின் ஆண்டவர் பாழாக்கும் கொள்ளை நோயை அவனுடைய கொழுத்த வீரர்கள் இடையே அனுப்புவார்: அவனது மேன்மையின்கீழ் தீ ஒன்றை வைப்பார்: அவர் நெருப்பு மூட்டுவார்: அது கொழுந்துவிட்டு எரியும்.
17
இஸ்ரயேலின் ஒளியானவர் நெருப்பாக மாறுவார்: அதன் தூயவர் தீக்கொழுந்தாய் உருவெடுப்பார்: அது அவனுடைய முட்புதர்களையும் நெருஞ்சி முள்களையும், ஒரே நாளில் சுட்டெரித்துச் சாம்பலாக்கி விடும்.
18
வனப்புமிக்க அவனுடைய காடுகள், செழிப்புமிக்க அவனுடைய தோட்டங்கள் யாவும் உள்ளும் புறமும் அழிக்கப்படும்: அது நோயாளி ஒருவன் உருக்குலைவதை ஒத்திருக்கும்.