3
இடக்கையால் அவர் என் தலையைத் தாங்கிக் கொள்வார்: வலக்கையால் அவர் என்னைத் தழுவிக் கொள்வார்.
4
எருசலேம் மங்கையரே, ஆணையிட்டுக் கேட்கின்றேன்: காதலை ஏன் தட்டி எழுப்புகின்றீர்? தானே விரும்பும்வரை அதை ஏன் தட்டி எழுப்புகின்றீர்?
5
“யார் இவள்! பாலைவெளியினின்று எழுந்து வருபவள்: தன் காதலர்மேல் சாய்ந்து கொண்டு வருபவள் யார் இவள்?” கிச்சிலி மரத்தடியில் நான் உம்மை எழுப்பினேன்: அங்கேதான் உம்தாய் பேறுகால வேதனையுற்றாள்.