உன்னதப்பாட்டு 7:11-13 - WCV
11
என் காதலரே, வாரும்: வயல்வெளிக்குப் போவோம்: மருதோன்றிகள் நடுவில் இரவைக் கழிப்போம்.
12
வைகறையில் திராட்சைத் தோட்டத்திற்குப் போவோம்: திராட்சைக் கொடிகள் துளிர்த்தனவா, அதிலிருக்கும் மொட்டுகள் விரிந்தனவா, மாதுளை மரங்கள் மலர்ந்தனவா என்று பார்ப்போம். அங்கே உம்மேல் என் காதலைப் பொழிவேன்.
13
காதற்கனிகளின் மணம் கமழுகின்றது: இனியது அனைத்தும் நம் கதவருகில் உளது: புதிதாய்ப் பறித்தனவும் பலநாள் காத்தனவுமான பழங்களை என் காதலரே, உமக்கென்றே நான் சேர்த்து வைத்தேன்.