உன்னதப்பாட்டு 6:4-10 - WCV
4
என் அன்பே. நீ திரட்சாவைப்போல் அழகுள்ளவள்: எருசலேமைப்போல் எழில் நிறைந்தவள்: போரணிபோல் வியப்பார்வம் ஊட்டுகின்றாய்!
5
என்னிடமிருந்து உன் கண்களைத் திருப்பிக்கொள்: அவை என்னை மயக்குகின்றன: கிலயாதிலிருந்து இறங்கிவரும் வெள்ளாட்டு மந்தை போன்றது உன் கூந்தல்.
6
உன் பற்களோ, குளித்துக்கரையேறும் பெண் ஆடுகளின் மந்தைபோல்வன: அவையாவும் இரட்டைக்குட்டி போட்டவை: அவற்றுள் ஒன்றேனும் மலடு இல்லை.
7
முகத்திரையின் பின்னிருக்கும் உன் கன்னங்கள் பிளந்த மாதுளம் பழத்திற்கு நிகரானவை.
8
அரசியர் அறுபது பேர்: வைப்பாட்டியர் எண்பது பேர்: இளம்பெண்கள் எண்ணிறந்தவர்.
9
என் வெண்புறா, அழகின் வடிவம் அவள் ஒருத்தியே! அவள் தாய்க்கும் அவள் ஒருத்தியே: அவளைப் பெற்றவளுக்கு அவள் அருமையானவள்: மங்கையர் அவளைக் கண்டனர்: வாழ்த்தினர்: அரசியரும் வைப்பாட்டியரும் அவளைப் புகழ்ந்தனர்:
10
“யாரிவள்! வைகறைபோல் தோற்றம்: திங்களைப் போல் அழகு: ஞாயிறுபோல் ஒளி: போரணிபோல் வியப்பார்வம்: யாரிவள்!”