12
பூட்டியுள்ள தோட்டம் நீ: என் தங்காய், மணமகளே, பூட்டியுள்ள தோட்டம் நீ: முத்திரையிட்ட கிணறு நீ!
13
மாதுளைச் சோலையாய்த் தளிர்த்துள்ளாய்: ஆங்கே தித்திக்கும் கனிகள் உண்டு: மருதோன்றியும் நரந்தமும் உண்டு.
14
நரந்தம், மஞ்சள், வசம்பு, இலவங்கம், எல்லாவகை நறுமண மரங்களும், வெள்ளைப்போளமும் அகிலும், தலைசிறந்த நறுமணப் பொருள்கள் யாவுமுண்டு.
15
நீ தோட்டங்களின் நீரூற்று: வற்றாது நீர்சுரக்கும் கிணறு: லெபலோனினின்று வரும் நீரோடை!
16
வாடையே, எழு! தென்றலே, வா! என் தோட்டத்தின்மேல் வீசு! அதன் நறுமணம் பரவட்டும்! என் காதலர் தம் தோட்டத்திற்கு வரட்டும்! அதன் தித்திக்கும் கனிகளை உண்ணட்டும்!