7
ஆகவே, நீ நன்றாய்ச் சாப்பிடு: களிப்புடனிரு: திராட்சை இரசம் அருந்தி மகிழ்ச்சியுடனிரு: தயங்காதே. இவை கடவுளுக்கு உடன்பாடு.
8
எப்போதும் நல்லாடை உடுத்து. தரையில் நறுமணத் தைலம் தடவிக்கொள்.
9
இவ்வுலக வாழ்க்கை வீணெனினும், உனக்குக் கிடைத்துள்ள வாழ்நாள் முழுதும் நீ உன் அன்பு மனைவியோடு இன்புற்றிரு. ஏனெனில், உன் வாழ்நாளில் உலகில் நீ படும்பாட்டிற்கு ஈடாகக் கிடைப்பது இதுவே.
10
நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய்: அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய். ஏனெனில், நீ நெருங்கிக் கொண்டிருக்கும் பாதாளத்தில் எவரும் செயல் புரிவதுமில்லை: சிந்தனை செய்வதுமில்லை: அறிவு பெறுவதுமில்லை: அங்கே ஞானமுமில்லை.