2
மாந்தருள் மதிகேடன் நான்: மனிதருக்குரிய அறிவாற்றல் எனக்கில்லை.
3
ஞானத்தை நான் கற்றுணரவில்லை: கடவுளைப்பற்றிய அறிவு எனக்கில்லை.
4
வானத்திற்கு ஏறிச்சென்று மீண்டவர் யார்? தம் கைப்பிடிக்குள் காற்றை ஒருங்கே கொணர்ந்தவர் யார்? கடல்களை மேலாடையில் அடக்கிவைத்தவர் யார்? மண்ணுலகின் எல்லைகளைக் குறித்தவர் யார்? அவர் பெயரென்ன? அவருடைய மகன் பெயரென்ன? நீதான் எலலாவற்றையும் அறிந்தவனாயிற்றே!