23
தீய நெஞ்சத்தை மறைக்க நயமாகப் பேசுவது, மட்பாண்டத்திற்கு மெருகூட்டிப் பளபளக்கச் செய்வது போலாகும்.
24
பகையுணர்ச்சி உள்ளவர் நாவினால் கபடத்தை நயம்படப் பேசுவார்: உள்ளத்திலோ கபடம் மறைந்திருக்கும்.
25
அவர் நயமாகப் பேசினாலும் அவரை நம்பாதே: அவர் உள்ளத்தில் அருவருக்கத்தக்கவை ஏழு இருக்கும்.
26
அவர் தம் பகையை வஞ்சகமாக மறைத்து வைத்திருப்பினும், அவரது தீயகுணம் மக்களிடையே அம்பலமாகிவிடும்.