நீதிமொழிகள் 25:8-10 - WCV
8
ஏதோ ஒன்றைப் பார்த்தவுடன் உடனே வழக்கு மன்றத்திற்குப் போகாதே: நீ கூறுவது தவறென்று வேறொருவர் காட்டிவிட்டால் அப்பொழுது நீ என்ன செய்வாய்?
9
அடுத்திருப்பாரோடு உனக்குள்ள வழக்கை அவருடனேயே பேசித் தீர்த்துக்கொள்: வேறொருவரைப் பற்றிய மறைசெய்தியை வெளிப்படுத்தாதே.
10
வேளிப்படுத்தினால் அதைக் கேட்பவர் உன்னை இகழுவார்: உனக்கு வரும் மானக்கேடு நீங்காது.