நீதிமொழிகள் 24:30-34 - WCV
30
சோம்பேறியின் விளைநிலம் வழியாக நான் நடந்துசென்றேன்: அந்த மதிகேடருடைய திராட்சைத் தோட்டத்தினூடே சென்றேன்.
31
அதில் எங்கும் முட்செடி காணப்பட்டது: நிலம் முழுவதையும் காஞ்சொறிச் செடி மூடியிருந்தது: அதன் சுவர் இடிந்து கிடந்தது.
32
அதை நான் பார்த்ததும் சிந்தனை செய்தேன்: அந்தக் காட்சி எனக்குக் கற்பித்த பாடம் இதுவே:
33
இன்னும் சிறிது நேரம் தூங்கு: இன்னும் சிறிது நேரம் உறங்கு: கையை முடக்கிக்கொண்டு இன்னும் சிறிது நேரம் படுத்திரு.
34
அப்பொழுது வறுமை உன்மீது வழிப்பறிக் கள்வனைப்போலப் பாயும்: ஏழ்மை நிலை உன்னைப் போர் வீரனைப் போலத் தாக்கும்.