யாத்திராகமம் 9:3-6 - WCV
3
நாட்டிலுள்ள குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், எருதுகள், ஆடுகள் ஆகிய உன் கால்நடைகள் மேல் கடவுளின் கைவன்மை மிகக்கொடிய கொள்ளை நோயாக வரப்போகிறது.
4
ஆண்டவரும், இஸ்ரயேலரின் கால்நடைகளுக்கும், எகிப்தியரின் கால்நடைகளுக்கும் இடையே வேறுபாடு காட்டுவார்.எனவே இஸ்ரயேல் மக்களுக்குரியவை அனைத்திலும் எவையுமே மடிந்துபோகா.
5
நாளையதினமே ஆண்டவர் இதனை இந்நாட்டில் செயல்படுத்தப்போகிறார்”என்று ஆண்டவரே ஒரு நேரத்தையும் குறித்துவிட்டார்.”
6
அதன்படி எகிப்தியரின் கால்நடைகளெல்லாம் மடிந்தன.இஸ்ரயேல் மக்களின் கால்நடைகளிலோ எதுவும் சாகவில்லை.