16
தம் தலைமுறைகளின் வரிசைப்படி லேவியின் புதல்வரின் பெயர்கள்: கேர்சோன், கோகாத்து, மெராரி.லேவி வாழ்ந்தது நூற்று முப்பத்தேழு ஆண்டுகள்.
17
கேர்சோனின் புதல்வர்: லிப்னி, சிமெயி.இவர்கள் தம்தம் குடும்பங்களுக்குத் தலைவர்கள்.
18
கோகாத்தின் புதல்வர்: அம்ராம், இட்சகார், எப்ரோன், உசியேல்.கோகாத்து வாழ்ந்தது நூற்று முப்பத்துமூன்று ஆண்டுகள்.
19
மெராரியின் புதல்வர்: மக்லி, மூசி.இவைகளே தலைமுறை வரிசைப்படி லேவியின் குடும்பங்கள்.
20
அம்ராம் தன் தந்தையின் சகோதரியாகிய யோக்கபேது என்பவளைத் தனக்கு மனைவியாக்கிக் கொண்டான்.அவனுக்கு அவள் ஆரோன், மோசே என்பவர்களைப் பெற்றெடுத்தாள்.அம்ராம் வாழ்ந்தது நூற்றுமுப்பத்தேழு ஆண்டுகள்.