10
மோசே ஆண்டவரிடம்: “ஐயோ! ஆண்டவரே! நீர் உமது அடியானிடம் பேசுவதற்கும் முன்போ, பேசிய பின்போ, நாவன்மை அற்றவன் நான்! ஏனெனில், எனக்கு வாய் திக்கும்: நாவும் குழறும்” என்றார்.
11
ஆண்டவர் அவரிடம், “மனிதனுக்கு வாய் அமைத்தவர் யார்? அவனை ஊமையாக அல்லது செவிடாக அல்லது பார்வையுள்ளவனாக அல்லது குருடனாக வைப்பவர் யார்? ஆண்டவராகிய நான்தானே!
12
ஆகவே, இப்போதே போ! நானே உன் நாவில் இருப்பேன்: நீ பேச வேண்டியதை உனக்குக் கற்பிப்பேன்” என்றார்.
13
அதற்கு அவர், “வேண்டாம், ஆண்டவரே! தகுதியுடைய வேறொருவனை நீர் இப்போதே அனுப்பிவைப்பீராக!” என்றுரைத்தார்.