யாத்திராகமம் 37:25-29 - WCV
25
அவர் சித்திம் மரத்தால் தூபப்பீடம் செய்தார்.அது நீளம் ஒரு முழமும் அகலம் ஒரு முழமுமாக சதுரவடிவமாயிருந்தது.அதன் உயரமோ இரண்டு முழம்.அதன் கொம்புகள் அதனுடன் ஒன்றிணைந்திருந்தன.
26
அவர் அதன்மேல் பாகம், அதன் பக்கங்கள், அதன் கொம்புகள் ஆகியவற்றைப் பசும்பொன்னால் வேய்ந்து சுற்றிலும் தங்கத் தோரணம் பொருத்தினார்.
27
அதைத் தூக்கிச் செல்லும் தண்டுகளைத் தாங்க அதன் தோரணத்துக்குக் கீழே இரு மூலைகளிலும் இரு பொன் வளையங்கள் வீதம் இரு பக்கங்களிலும் அவர் பொருத்தினார்.
28
சித்திம் மரத்தால் அவர் தண்டுகள் செய்து அவற்றைப் பொன்னால் பொதிந்தார்.
29
அவர் தூய திருப்பொழிவு எண்ணெயையும் திறமை வாய்ந்த பரிமளத்தயாரிப்பாளன் செய்வது போல் செய்யப்பட்டதும் கலப்பற்றதுமான நறுமணத் தூபத்தையும் தயாரித்தார்.