யாத்திராகமம் 34:5-7 - WCV
5
ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து, அங்கே அவர் பக்கமாய் நின்றுகொண்டு,ஆண்டவர்”என்ற பெயரை அறிவித்தார்.
6
அப்போது ஆண்டவர் அவர் முன்னிலையில் கடந்து செல்கையில், “ஆண்டவர்! ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்: சினம் கொள்ளத் தயங்குபவர்: பேரன்பு மிக்கவர்: நம்பிக்கைக்குரியவர்.
7
ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு செய்பவர்: கொடுமையையும் குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர்: ஆயினும், தண்டனைக்குத் தப்பவிடாமல் தந்தையரின் கொடுமையைப் பிள்ளைகள் மேலும் பிள்ளைகளின் பிள்ளைகள் மேலும், மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டித்துத் தீர்ப்பவர்” என அறிவித்தார்.