7
அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, “இங்கிருந்து இறங்கிப்போ.நீ எகிப்திலிருந்து நடத்திவந்த உன் மக்கள் தங்களுக்குக் கேடு வருவித்துக்கொண்டனர்.
8
நான் கட்டளையிட்ட நெறியிலிருந்து இதற்குள்ளாகவே விலகி அவர்கள் தங்களுக்கென ஒரு கன்றுக் குட்டியை வார்த்துக் கொண்டார்கள்.அதற்கு வழிபாடு செய்து, பலியிட்டு,இஸ்ரயேலே, எகிப்து நாட்டினின்று உன்னை நடத்தி வந்த தெய்வங்கள் இவையே”என்று கூறிக் கொள்கிறார்கள்” என்றார்.
9
மேலும் ஆண்டவர் மோசேயிடம், “இம் மக்களை எனக்குத் தெரியும்: வணங்காக்கழுத்துள்ள மக்கள் அவர்கள்.
10
இப்போது என்னை விட்டுவிடு.அவர்கள்மேல் என் கோபக்கனல் மூண்டிருப்பதால் நான் அவர்களை அழித்தொழிக்கப் போகிறேன் உன்னையோ பேரினமாக்குவேன்” என்றார்.