13
மோசே கடவுளிடம், “இதோ! இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல,அவர் பெயர் என்ன?”என்று அவர்கள் என்னை வினவினால், அவர்களுக்கு என்ன சொல்வேன்?” என்று கேட்டார்.
14
கடவுள் மோசேயை நோக்கி,இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே”என்றார்.மேலும் அவர், “நீ இஸ்ரயேல் மக்களிடம்,இருக்கின்றவர் நானே”என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்” என்றார்.
15
கடவுள் மீண்டும் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: “நீ இஸ்ரயேல் மக்களிடம்,உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர்-ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்-என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்”என்று சொல்.இதுவே என்றென்றும் என்பெயர்: தலைமுறை தலைமுறையாக என் நினைவுச் சின்னமும் இதுவே!