யாத்திராகமம் 21:1-4 - WCV
1
அவர்களுக்கு நீ அளிக்க வேண்டிய நீதிச்சட்டங்கள் பின்வருமாறு:
2
நீ ஒரு எபிரேய அடிமையை வாங்கினால், அவன் உனக்கு ஆறு ஆண்டுகள் அடிமை வேலை செய்வான்.ஏழாம் ஆண்டு அவன் எதுவும் தராமல் விடு தலைபெற்று வெளியேறுவான்.
3
தனித்து வந்திருந்தால் தனித்து வெளியேறுவான்: மனைவியோடு வந்திருந்தால் அவனுடைய மனைவியும் அவனோடு புறப்பட்டுச் செல்வாள்.
4
தலைவன் அவனுக்குப் பெண் கொடுத்திருக்க அவள்வழி அவனுக்குப் புதல்வரோ புதல்வியரோ பிறந்திருந்தால், மனைவியும் பிள்ளைகளும் அவளுடைய தலைவனுக்கே சொந்தமானவர்.எனவே அவன் மட்டும் தனித்து வெளியேறுவான்.