17
இந்த ஒருமுறையும் என்பிழையைப் பொறுத்துக்கொண்டு இந்தச் சாவையும் என்னிடமிருந்து அகற்றிவிடும்படி உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளுங்கள்” என்றான்.
18
மோசேயும் பார்வோனிடமிருந்து அகன்று ஆண்டவரிடம் மன்றாடினார்.ஆண்டவரும் மிக வலுவான மேல்காற்று வீசச் செய்தார்.
19
அது வெட்டுக்கிளிகளை வாரிக்கொண்டு அவற்றைச் செங்கடலில் வீசியெறிந்தது.வெட்டுக்கிளிகளில் ஒன்றைக்கூட அது எகிப்தின் எல்லைகளுக்குள் விட்டுவைக்கவில்லை.
20
ஆண்டவர் பார்வோனின் மனம் இறுகிப்போகச் செய்தார்.அவனும் இஸ்ரயேல் மக்களைப் போகவிடவில்லை.